×

அரியலூர் நகராட்சி மையபகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.1 கோடியில் அழகுபடுத்தபட்ட இருசுகுட்டை

*மக்கள் நடைபயிற்சி செல்வதற்கு மாற்றியமைப்பு

அரியலூர் : அரியலூர் நகராட்சி மைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட 1 கோடி மதிப்புக்கு மேல் இருசு குட்டை அழகுபடுத்தப் பட்டு பொதுமக்கள் நடை பயிற்சி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.அரியலூர் நகராட்சியில் ராஜாஜி நகர், காமராஜர் நகர், பெரியார் நகர், அழகப்பா நகர் என நான்கு புறமும் உள்ள பெரிய நகர்களுக்கு மையமாக அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இருசு குட்டை உள்ளது.

இந்த இருசு குட்டை சுற்றி உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீர் உயர முக்கிய நீர்நிலையாக இருந்தது. அந்த இருசு குட்டையை 25 ஆண்டு காலமாக ஏராளமானோர் ஆக்கிரமித்து 20 அடி உயரத்துக்கு மண்களை கொட்டி குட்டையை மூடி கடைகள், வீடுகள், வர்த்தக வளாகங்களை கட்டி இருந்தனர். இதனால் குட்டை சுற்றி உள்ள வீடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 25 அடிகளில் கிணறுகளில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டி நிலை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட்டனர்.

6 ஆண்டு களுக்கு முன்பு அரியலூர் சார் ஆட்சியராக இருந்த சந்திராசேகர சாகமுரி நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்வதை தடுக்க அந்த குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முன் வந்தார். பிறகு உச்சநீதிமன்ற வரை வழக்கு சென்று பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்த பகுதியை சேர்ந்த சில சங்கங்கள் குட்டையில் கொட்டப்பட்டு இருந்த மண்களை வெட்டி கரை அமைத்து மீண்டும் நீர்நிலையாக மாற்றினர்.

கடந்த ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் இருசு குட்டை ஏரிக்கு அடிக்கல் நாட்டினார். அரியலூர் நகராட்சி இருசு குட்டையை கரைகளை சுற்றி சிமெண்ட் ஒடுகளை பதித்து நடை பாதை அமைத்து குட்டையில் 3.5 ஏக்கர் எல்லை முழுவதும் இருப்பு வேலிகளால் வேலி அமைத்து கதவு போட்டு உள்ளனர். பொதுமக்கள் அமர பெஞ்சுகள், அழகான விளக்குகள் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 3.5 ஏக்கர் முழுவதும் சுற்றி அமைக்கப்பட்டு உள்ள நடை பாதையில் காலை ,மாலை நேரங்களில் பெண்கள், குழந்தைகள் சுற்றி நடை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குட்டைக்கு அரசு கலை கல்லூரி வாசலில் இருந்தும், அதே போல செந்துறை சாலையில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தில் இருந்தும் மழை நீர் வடிகால் அகலமாக கட்டி காமராஜர் நகரில் , பெரியார் நகரிலும் பெய்யும் மழை நீர் முழுமையும் இருசு குட்டைக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்க்கும் படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருசு குட்டையின் நடுவில் அப்போது வீடுகள் கட்டியிருந்த ஆக்கிரமித்து இருந்தவர்கள் நிரப்பி முடிய 10 அடி மண்ணை முழுமையாக வெட்டி வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் அதிக மழைநீர் தேக்கப்பட்டு சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே 10 அடிக்கு குட்டையின் மையத்தில் உள்ள மண்ணை அரியலூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரியலூர் நகராட்சி மையபகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.1 கோடியில் அழகுபடுத்தபட்ட இருசுகுட்டை appeared first on Dinakaran.

Tags : Ariyalur Municipal Centre ,Ariyalur ,Ariyalur Municipal Center ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...