×

கலவை அடுத்த கே.வேளூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்திய கலைஞர்கள்-அமைச்சர் பங்கேற்பு

கலவை : கலவை அடுத்த கே வேளூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.காந்தி, எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கலவை அடுத்த கே வேளூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற்றது. மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கைக்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில், மண்ணால் துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன், துரியோதனன் போரிடும் போர்க்கள காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.
இதில் பீமன் வேடம் அணிந்தவர் துரியோதனன் சிலையின் தெடைப்பகுதியில் கதாயுகத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது இதை திரவுபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியபின் துரியோதனன் சிலையை 3 முறை வலம் வந்து சபதம் முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், விழா குழு பொறுப்பாளர்கள், கே வேளூர் கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழவின் இறுதியாக அமைச்சர் ஆர்.காந்தி நாடக கலைஞர்களுக்கு வேட்டி மற்றும் சேலைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலவை அடுத்த கே.வேளூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்திய கலைஞர்கள்-அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Duryodanan ,Vellore Village ,K Velur village ,Minister ,R. Gandhi ,MLA ,Duryothanan ,
× RELATED உத்திரமேரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம் கோலாகலம்