×

அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அருப்புக்கோட்டை பகுதியில் நகர் முழுவதும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. நகரின் முக்குரோடு திருப்பத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஒட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அருகே வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காற்றில் பாதிப்படையும் பிளக்ஸ் போர்டுகள் திடீரென்று உயர்மின் அழுத்த கம்பிகளில் விழுவதால் மின்தடைக்கு வழிவகுக்கிறது.

அவைவைக்கப்படும் இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகள் உள்ளன. அக்கம்பிகளை உரசும்படியும் சில அடிதூரத்திலும் பேனர்களை வைக்கும் போதும் மீண்டும் அப்புறப்படுத்தும் போதும் ஆபத்தை விலைகொடுத்துவாங்குவது போன்ற நிலை ஏற்படுகிறது. மெயின் ரோட்டின் ஓரங்களில் இடம் பிடித்து திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக மக்களுக்கும் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படும்படியான பிளக்ஸ் பேனர்களை வைத்து செல்வது அன்றாடம் தொடர்கிறது.

மேலும் மக்கள் நடமாட்டமுள்ள ரோடுகள், குறுகிய திருப்பங்கள், வணிக நிறுவனங்கள், பஸ் ஸ்டாப்புகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கலை வைக்கப்படுகின்றன. விழாக்கள் முடிந்து பல நாட்கள் கடந்தபோதும் சம்பந்தப்பட்ட பிளக்ஸ்கள் அகற்றப்படுவதில்லை. மேலும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு முன்புஉரிய அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில் அதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. எனவே விதி முறைமீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நகராட்சி நகரமைப்பு பிரிவு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Arapukkotta ,Nagar ,
× RELATED நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி பகுதியில் நாளை மின்தடை