
- இனிய தெரு
- ஓடி காமார்சிய சாலை
- நீலகிரி மாவட்டக் காவல்துறை
- ஒயுடி
- ஆட்டம்
- கீழே
- ஓதி காமார்ஷ்யா சாலை
- நீலகிரி மாவட்டக் காவல்படை
- சந்தோஷமாக
- ஊட்டி காமர்சல் சாலை
- தின மலர்
ஊட்டி : நீலகிரி மாவட்ட காவல்துைற சார்பில் ஊட்டி கமர்சியல் சாலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது.
நாள் முழுவதும் பரபரப்பாக இயந்திர கதியில் இயங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள், பரபரப்புக்கும், மன அழுத்தத்துக்கும் ஓய்வு அளித்து, வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில் சென்னையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு ேஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் ேகாடை சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான கமர்சியல் சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கமர்சியல் சாலையில் சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ஹேப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் எஸ்பிக்கள் மணி, சௌந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எஸ்பி பிரபாகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பழங்குடியின மக்களான தோடர், கோத்தர் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சதுரங்கம், பல்லாங்குழி, கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆடி பாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் கமர்சியல் சாலை பகுதி மகிழ்ச்சியில் திளைத்தது. இந்நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வரும் வாரங்களிலும் நடத்தப்படும் என எஸ்பி தெரிவித்தார்.
The post நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊட்டி கமர்சியல் சாலையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் appeared first on Dinakaran.