×

ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் பகுதியில் குவிந்த பயணிகள் கூட்டம்

ஊட்டி : ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் காரணமாக கடந்த இரு மாதங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஊட்டியில் தங்கி இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இம்மாத துவக்கத்தில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது.

தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, ேராஜா கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்ட கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்துள்ளன. முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஊட்டியில் நடந்தது. இதனை சுமார் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதற்கு ஏற்றாற்போல் நீலகிாியில் இதமான காலநிலை நிலவி வருவதால், பழக்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூாில் குவிந்தனர்.

பழக்கண்காட்சியை பாா்த்து விட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நேற்று முன்தினம் 25 ஆயிரத்து 359 பேரும், நேற்று 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். ஏராளமான வாகனங்கள் நகருக்கு வந்ததால் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் ஊட்டி எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கூடலூர் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மதியம் 12 மணிக்கு பின் மழை கொட்டிய நிலையில் மழையில் நனைந்த படியே பூங்காக்களை பார்த்து ரசித்தனர். இதேபோல ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

The post ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் பகுதியில் குவிந்த பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thottapetta ,Ooty ,Dottapetta ,Baikara boat house ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...