×

யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் கம்பம் வனத்துறை: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானையை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை பிடிக்க 3 கும்கி யானைகளை தயார் நிலையில் நிறுத்தி உள்ளனர். கேரளாவில் 11 பேர் உயிரிழப்புக்கு காரணமான அரிசிக்கொம்பன் யானை கடந்த மாதம் பெரியார் புலிகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது. இந்த யானை தமிழ்நாடு எல்லை வழியாக பயிர்களை சேதப்படுத்திய படி நேற்று கம்பம் நகருக்குள் நுழைந்தது. இதனால் அங்கு நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மேகமலை காப்பு காட்டுக்குள் நுழைந்த யானை இரவு நாராயண தேவன் பட்டி கிராமத்தின் விளை நிலங்களுக்குள் புகுந்து பின்னர் வனப்பகுதிக்கு திரும்பி சென்றது. இதன் நடமாட்டத்தை அலுவலகத்தில் இருந்தபடியே வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழைந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 3 கும்கி யானைகளை தயார் நிலையில் நிறுத்தி உள்ளனர்.

இதனிடையே சுருளிபட்டியில் உள்ள கூத்துநாச்சியம்மன் கோயில் அருகே முகாமிட்டு இருந்த யானை சண்முகா நதி அணை பகுதிக்கு இடம்பெயர்ந்து இருப்பதாக ரேடியோ கால தகவல் மூலம் தெரிவித்துள்ளனர். யானையின் நடமாட்டத்தால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் இரண்டாவது நாளாக தடை நீடிக்கிறது.

The post யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் கம்பம் வனத்துறை: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Polam ,Curly ,Rice Komban Elephant ,Theni district ,Pole Wilderness Department ,Scrolly ,Dinakaran ,
× RELATED தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்