×

முடிவுக்கு வருமா அசோக் கெலாட் – சச்சின் பைலட் மோதல்?: இருவரையும் ஒற்றுமைப்படுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம்

டெல்லி: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ள இருக்கும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட்டிற்கும் இடையே கோஷ்டி மோதல் அனல் பறக்கிறது.

கடந்த பாஜக அரசின் ஊழல் குறித்து விசாரிக்க வலியுறுத்தி அசோக் கெலாட்க்கு நெருக்கடி தரும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே சச்சின் பைலட் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஏற்கனவே கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஒன்றாக சேர்ந்து கர்நாடக தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. அதே போன்று ராஜதானில் பிரிந்திருக்கும் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரை ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக டெல்லியில் இன்று அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரையும் தனித்தனியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீர்க்கப்பட்டு சட்டப்பேரவை தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது குறித்து கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

The post முடிவுக்கு வருமா அசோக் கெலாட் – சச்சின் பைலட் மோதல்?: இருவரையும் ஒற்றுமைப்படுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் appeared first on Dinakaran.

Tags : Ashok Khelat ,Sachin Pilot ,Congress ,Delhi ,Rajasthan ,Chief Minister ,
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...