×

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பறந்தது

பீஜிங்: போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி சீன அரசின் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சி919 விமானத்தை தயாரித்துள்ளது. இந்த சி919 பயணிகள் விமானம் நேற்று அதிகாலை வெற்றிகரமாக தனது வணிக ரீதியான பயணத்தை தொடங்கியது. ஷாங்காயில் இருந்து பீய்ஜிங் சென்ற இந்த விமானத்தில் 128 பயணிகள் பறந்தனர். 2 மணி நேரம் 25 நிமிடங்களில் சி919 விமானம் பீய்ஜிங்கை சென்றடைந்தது. இந்த விமானம் சர்வதேச தர தகுதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பறந்தது appeared first on Dinakaran.

Tags : Beijing ,Boeing ,Airbus ,government ,China ,Dinakaran ,
× RELATED ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல்...