
- பொங்கல் பண்டிகை மற்றும் ஜப்பானிய அறுவடை திருவிழா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஜப்பான்
- டோக்கியோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிங்கப்பூர்
- ஒசாக்கா, ஜப்பான்
- பொங்கல் திருவிழா
- ஜப்பனீஸ் அறுவடைத் திருவிழா
- முதல்வர்
- ஸ்டாலின்
டோக்கியோ: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல்வரை ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். டோக்கியோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து ஜப்பான் வாழ் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்:
சூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு தான். வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வணிகத்திற்காக தமிழர்கள் ஜப்பான் வந்துள்ளனர். ஜப்பானியர்கள் தமிழை கற்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்திற்கும், ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம். தமிழை காப்பது என்பது தமிழினத்தை காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை மறக்க மாட்டேன். தமிழகத்திற்கு வாருங்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது.
ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ஜப்பானிய தமிழ் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். அயலகத் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன். என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது: ஜப்பான் வாழ் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.