×

வீட்டு வசதி வாரியத்தில் பணிகள் காலதாமதம்; காலிப்பணியிடங்களை 10 ஆண்டாக நிரப்பாததே காரணம்: அமைச்சர் சு.முத்துசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: வீட்டு வசதி வாரியத்தில் பணிகள் காலதாமதம் ஆவதற்கு 10 ஆண்டு காலம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருந்ததே காரணம் என அமைச்சர் சு.முத்துசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வீட்டு வசதி வாரியத்தில் பணிகள் காலதாமதம் ஆவதற்கு, கடந்த 10 ஆண்டு காலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் இருந்ததே காரணம். வீட்டு வசதி வாரியத்தில் மட்டும் 50 சதவீதம், சிஎம்டிஏ.வில் 37 சதவீதமும், டிடிசிபி.பிரிவில் 35 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதனால், தற்போதுள்ள பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை தற்போது தான் நிரப்பி வருகிறோம். தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் விற்பனையாகாத 8 ஆயிரம் காலி மனைகள், வீடுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான வட்டியை மட்டும் அரசு தள்ளுபடி செய்துள்ளது. மனைகளுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவில்லை. மனைகளை பொறுத்தவரை சலுகை விலையில் கொடுக்கும் திட்டம் இல்லை. அந்த மனைகளை மேம்படுத்தி தர திட்டம் வகுத்துள்ளோம்.

The post வீட்டு வசதி வாரியத்தில் பணிகள் காலதாமதம்; காலிப்பணியிடங்களை 10 ஆண்டாக நிரப்பாததே காரணம்: அமைச்சர் சு.முத்துசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Housing Facilities Board ,Minister ,Suu. Muthusamy ,Suzuki Muthusamy ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு ரத்து கோரி அதிமுக...