×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி துவக்கம்: 1.2 டன் அன்னாசியால் பிரமாண்ட அலங்காரம்

ஊட்டி,: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி கோலாகலமாக நேற்று துவங்கியது. இதில், 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டு பிரமாண்ட அலங்காரம் அமைக்கப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா ஆகியோர் பழக்கண்காட்சியை துவக்கி வைத்தனர். சிறப்பம்சமாக சுமார் 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டுஅமைக்கப்பட்ட பிரமாண்ட அன்னாசி பழம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

மேலும் பழக்கூடை, பழ பிரமிடு, மண் புழு, மலபார் அணில் போன்ற வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை போன்ற வடிவங்களும், நீலகிரி மாவட்டத்தின் 200வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஊட்டி – 200 போன்ற வடிவங்களும் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் மற்றும் குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இன்றும் பழக்கண்காட்சியை பார்வையிடலாம்.

ஆஸ்கர் தம்பதி கவுரவிப்பு
பழக்கண்காட்சி துவக்க விழாவில், ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியர் பொம்மன், பெள்ளி ஆகியோர் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி துவக்கம்: 1.2 டன் அன்னாசியால் பிரமாண்ட அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : celebration ,Gunnur Sims Park ,Oodi ,Gunnur Sims Zoo ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்