×

இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து சிக்கலான சவால்: ஜெய்சங்கர் பேச்சு

அகமதாபாத்: ‘சீனாவிடம் இருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை எதிர்கொள்கிறது’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசியதாவது: இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே அமைதி சீர்குலைந்தால், இருதரப்பு உறவு பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. நிச்சயமாக சீனாவிடம் இருந்து நமக்கு சவால்கள் உள்ளன. அந்த சவால் மிகவும் சிக்கலான சவால். ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக எல்லையில் உள்ள நிலையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் ஆர்வம் ஆகியவை இருதரப்பு உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், என் கவலைகளை உணரவில்லை என்றால், என் ஆர்வத்தை புறக்கணித்தால், நாம் எப்படி நீண்ட காலம் பழக முடியும்? இதனால் நாங்கள் எங்கள் உரிமைக்காக நிற்க வேண்டி உள்ளது. எதிர்ப்பை வலியுறுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டி உள்ளது. இதுதான் துரதிஷ்டவசமாக சீனா உடனான உறவு வலுவாக இல்லாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து சிக்கலான சவால்: ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,China ,Jaishankar ,Ahmedabad ,Union External Affairs Minister ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...