- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- தெலுங்கானா
- முதலமைச்சர் சந்திரசேகரரா
- ஹைதெராபாத்
- சந்திரசேகர ராவ்
- பாஜக
ஐதராபாத்: ஐதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வட இந்தியாவில் சவால்விடும் வகையில் வளர்ந்து நிற்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 2-வது முறையாக அதிகாரத்தில் இருந்து வருகிறது.
அத்துடன் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே டெல்லி யூனியன் பிரதேச அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அணிதிரட்டி வருகிறார்.
அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரை சந்தித்த கெஜ்ரிவால், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவின் மற்றொரு பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்தார். இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் சந்திரசேகர ராவை சந்தித்தார்.
The post ஐதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்து பேசினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!! appeared first on Dinakaran.