சித்தூர் : சித்தூர் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஜெகனண்ணா சொல்லலாம் எனும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என வார்டு செயலாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்அருணா உத்தரவிட்டார். சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் அருணா, வார்டு செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், வார்டு செயலாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று மாநில அரசு செய்யும் நலத்திட்ட உதவிகளை குறித்து பொதுமக்களிடையே எடுத்து விளக்கிக் கூற வேண்டும்.
அதேபோல் பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் முதல்வர் ஜெகன்மோகனிடம் பேசுங்கள் என தெரிவித்து அதற்கான இலவச தொலைபேசி எண் 1902 என தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக வார்டு செயலாளர் குறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வார்டு செயலாளர்கள் ஒவ்வொரு வீடாக செல்லும்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசும்போது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் கையேடு மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு உத்தரவின்படி பொதுமக்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்.
அவ்வாறு செயலாளர்கள் தீர்த்து வைக்கவில்லை என்றால் ஜெகன் அண்ணனிடம் பேசலாம் என வார்டு நிர்வாகிகள் பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும். 2 நாட்கள் (சனி மற்றும் திங்கட்கிழமை) வார்டு செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு வார்டு செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கோவர்தன், மேலாளர் உமாமகேஷ்வர், சி.எம்.எம்.கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post ஜெகனண்ணாவிடம் சொல்லலாம் எனும் திட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும்-மாநகராட்சி ஆணையாளர் அருணா உத்தரவு appeared first on Dinakaran.
