×

மாநகரில் தொலைந்துபோன 32 லட்சம் மதிப்புள்ள 201 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

*மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா வழங்கினார்

திருச்சி : திருச்சி மாநகர காவல்துறை அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தொலைந்து போய் மீட்கப்பட்ட 201 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, மாநகர பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து காணாமல்போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அதன்பேரில் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 47 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் 45 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல் நிலைய எல்லையில் 43 செல்போன்களும், கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 34 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் 27 செல்போன்களும், பொன்மலை சரக காவல் நிலைய எல்லையில் 3 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 2 செல்போன்கள் உட்பட 201 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.32 லட்சம்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா கூறுகையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்போன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. செல்போனில் அனைவரும் பல தகவல் சேகரித்து வைத்துள்ளதால் அது தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை. இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது செல்போன்களில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

செல்போனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போனை கண்டுபிடித்து தந்தது மூலம் பொக்கிஷமான பழைய நினைவுகளை திரும்ப பெற வழி செய்து தந்துள்ளீர்கள் என கூறி மாநகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணை ஆணையர் தலைமையிடம், காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் காவல் உதவி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகரில் தொலைந்துபோன 32 லட்சம் மதிப்புள்ள 201 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Municipal Police Commissioner ,Sathyapriya Trichy ,Trichy ,Sathyapriya ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...