×

திருப்பூர் 8வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு

திருப்பூர், மே 27: திருப்பூர் மாநகராட்சி 8வது வார்டு நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8வது வார்டு கவுன்சிலர் வேலம்மாள் காந்தி, தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதைத்தொடர்ந்து நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று மாலை நடைபெற்றது. போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், கவுன்சிலர் வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

துணை மேயர் பாலசுப்ரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள். விழாவில் பாண்டியன்நகர் பகுதி திமுக செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் 8வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Tirupur 8th Ward ,Tirupur ,Nandanagar ,8th Ward ,Tirupur Corporation ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை