×

நெல்லை மாநகராட்சி 3வது வார்டு சேந்திமங்கலத்தில் புதிய ரேஷன் கடை

நெல்லை, மே 22: நெல்லை மாநகராட்சி 3வது வார்டு, சேந்திமங்கலம், பெருமாள் கோயில் தெருவில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ரூ.10லட்சம் மதிப்பீட்டின் கீழ் நெல்லை மாநகராட்சி 3வது வார்டு, சேந்திமங்கலத்தில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடையை தச்சை பகுதி திமுக செயலாளரும், 3வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் ரேஷன் கடையில் விற்பனையை தொடங்கி வைத்து, அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர பிரதிநிதி சிவா, விவசாய அணி செயலாளர் தமிழரசன், வட்டச் செயலாளர் சிந்துமுருகன், ஜடாமுனி, ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் மணிகண்டன், வார்டு பிரதிநிதி துரை, நிர்வாகிகள் காந்தி, சேந்தி பாண்டி, சேந்தி மகேஷ், மந்திரமூர்த்தி, குட்டி, இலக்கிய அணி வில்சன், வினோத், ஆட்டோ மணி, முருகன், சிவா, தங்கவேல், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை மாநகராட்சி 3வது வார்டு சேந்திமங்கலத்தில் புதிய ரேஷன் கடை appeared first on Dinakaran.

Tags : Paddy Corporation 3rd Ward New Ration Shop ,Sendimangalam ,NALLI ,Perumal Temple Street ,3rd Ward ,Nellai Corporation ,Paddy Corporation 3rd Ward Sendimangalam New Ration Shop ,Dinakaran ,
× RELATED 32வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணி