×

திருச்செந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் அவசர சிகிச்சை மீட்பு மையம்

திருச்செந்தூர், மே 22: திருச்செந்தூரில் ஆதரவற்ற மனநல பாதிக்கப்பட்டோர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆதரவற்றோர்களுக்கான மனநல காப்பக அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். தி பெனியன் மற்றும் பெனியன் அகாடமி இயக்குநர் கிஷோர்குமார் வரவேற்றார். கனிமொழி எம்பி அவசர சிகிச்சை மையத்தை திறந்து குத்து
விளக்கு ஏற்றி வைத்து காப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது, திருச்செந்தூர் முக்கிய ஆன்மீக சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த ஆதரவற்றோர்களுக்கான மனநல காப்பக அவசர சிகிச்சை மையம் மாநிலத்திலேயே பத்தாவது சிறந்த மையமாக இங்கே திறக்கப்பட்டுள்ளது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இது திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரகப்பணிகள் துறை இணை இயக்குநர் கற்பகம், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஆர்டிஓ புஹாரி, தாசில்தார் வாமணன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா, திமுக நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தர் ரொட்ரிகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சோயா நிறுவனர் சரவணன் நன்றி கூறினார்.

The post திருச்செந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் அவசர சிகிச்சை மீட்பு மையம் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Kanimozhi MP ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...