×

கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி, மே 27: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோயிலில் நேற்று புரவி எடுப்பு திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் பிரான்மலையில் அரண்மனை புரவி மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் செய்யப்பட்டு, தேனம்மாள்பட்டி மந்தை அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று மாலை தேனாம்மாள்பட்டியில் இருந்து 2 அரண்மனைப் புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள், மாடுகளை பக்தர்கள் சுமந்து, ஊர்வலமாக கலியுக மெய் அய்யனார் கோயிலுக்கு வந்தனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. வண்ணமலர் அலங்காரத்தில் அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kaliyuga Mei Ayyanar Temple Puravi Take Festival ,Singampunari ,Puravi Teku Festival ,Kaliyuga Mei Aiyanar Temple ,Branmalai ,Kaliyuga Mei Aiyanar Temple Puravi Tepku Festival ,
× RELATED மின்தடை அறிவிப்பு