×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரூ.1.55 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம் மே 27: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியை பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி, அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, தும்படைக்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மயான கட்டிடம், காத்திருப்போர் வளாகம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் பதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணி, சனவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணி, கற்காத்தகுடி ஊராட்சியில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முன் ஜாமியா, செல்லம்மாள் (கி.ஊ)ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் திலீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரூ.1.55 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,RS Mangalam Panchayat Union ,Cholandur Govt High School Campus ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி