×

மேலூரில் துரோபதையம்மன் கோயில் பால்குட விழா

மேலூர், மே 27: மேலூரில் உள்ள துரோபதையம்மன் கோயில் பால்குட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மேலூரில் உள்ள  துரோபதையம்மன் கோயில் திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகளில் காப்பு கட்டிய பக்தர்கள், திருமஞ்சன குடம், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

வரும் 31ம் தேதி பீமன் கீசன் வேடமும், ஜூன் 6ல் சக்கர வியூக கோட்டையும், 9ம் தேதி அர்ச்சுனன் தபசு, 11, 12ல் கூந்தல் விரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஜூன் 13ல் பூ வளர்த்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மேலூர்  நாட்டார்களும், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொருளதவியை கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது.

The post மேலூரில் துரோபதையம்மன் கோயில் பால்குட விழா appeared first on Dinakaran.

Tags : Duropathaiyamman temple milk festival ,Mellur ,Melur ,Duropathaiyamman ,Duropathaiyamman Temple Milk Kuta Festival in ,
× RELATED மேலூரில் மே 30ல் கேரளா அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்