×

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை

டோக்கியோ: உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானில் கடந்த வாரம் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஜி7 நாடுகள் ஆலோசனை நடத்தின.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஜப்பான் கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக கேபினெட் தலைமை செயலாளர் ஹீரோகாசு மாட்சுனோ கூறுகையில், ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடை விதிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சொத்துக்கள் முடக்கப்படும். ரஷ்யா ராணுவம் தொடர்பான அமைப்புக்களுக்கான ஏற்றுமதி தடை செய்யப்படும்” என்றார்.

The post ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை appeared first on Dinakaran.

Tags : Russia ,Tokyo ,Japan ,Ukraine ,Dinakaran ,
× RELATED ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்