×

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம்: ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா தகவல்

சென்னை: படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதத்திற்குள் புது வடிவில் அறிமுகப்படுத்தப்படும் என ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா தெரிவித்தார். இதுகுறித்து ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா அளித்த பேட்டி: வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு 777 ரயில்கள் வடிவமைக்கப்பட்டு இந்திய ரயில்வேக்கு ஒப்படைக்கப்படும். இன்று 21 வது ரயில் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ராஜ்தானி ரயில் போல படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே மெட்ரோ, வந்தே புறநகர் ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே மெட்ரோவில் ஒரு பெட்டியில் 300 பேர் பயணிக்கலாம். அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்வது போல 100 கி.மீ.க்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையே இது இயக்கப்படும். 130 கி,மீ வேகத்தில் செல்லும்.

தற்போது தயாரிக்கக்கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 180 கி,மீ வேகத்தில் செல்லகூடியவை. இதை 200 கி,மீ வேகத்தில் இயக்குவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு செய்யும், ரஷ்யா உக்ரைன் போரால் உக்ரைனிலிருந்து வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள், எலக்ட்ரிக் உபகரணங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும், 200 படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வே வாரியம் ஆர்டர் செய்துள்ளது. இதில் 80 ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கும். பயணிகளுக்கு விபத்து குறித்து உடனுக்குடன் தகவல்கள் அலாரம், பிற ரயிலுடன் மோதாமல் இருக்க அலாரம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இவ்வாறு ஐசிஎப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

The post படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம்: ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா தகவல் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,ICF ,General Manager ,PG Mallya ,Chennai ,Dinakaran ,
× RELATED பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்...