×

நடுவலூரில் ஜல்லிக்கட்டு 650 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மற்றும் மரிய சூசை ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, பரமக்குடி, சேலம், நாமக்கல், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து 650 காளைகள் அழைத்து வரப்பட்டன. 350 வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் உறுமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. வாடிவாசல் வழியே முதலில் கோயில் காளையும், தொடர்ந்து மற்ற காளைகளும் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகள், மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட், அண்டா உட்பட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. ஜெயகொண்டம் டிஎஸ்பி ராஜ சோமசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post நடுவலூரில் ஜல்லிக்கட்டு 650 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Naduvalur ,T.D. Palur ,Ariyalur District ,Dt. Mariamman ,Temple ,Marya Susa Temple festival ,Palur ,Nadavalur ,Dinakaran ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை