×

நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பரமக்குடி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நயினார்கோவிலில் நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டிற்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சமணர்களுக்கு முத்தி கொடுத்தல், திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் ராமநாதமசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் பழனிவேல்பாண்டியன், ராமநாத தேவஸ்தான சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Vaikasi Festival ,Naganathaswamy Temple ,Nainarko ,Paramakudi ,Vaikasi Visakha festival ,Nayanarkoil Naganathaswamy Temple ,Ramanathapuram ,Paramakkudy ,Nayanarkoil ,Naganathaswamy ,
× RELATED அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்