×

பெங்களூரு அருகே தண்டவாள பராமரிப்பு பணி கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை: பெங்களூரு அருகே தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெங்களூரு அருகே ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எர்ணாகுளம் பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் வருகிற 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் எர்ணாகுளம்-சேலம் இடையே மட்டுமே இயக்கப்படும். சேலம் – பெங்களூரு இடையே மேற்குறிபிட்ட நாட்களில் இந்த ரயில் இயக்கப்படாது. பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் வருகிற 29, 30, 31 ஆகிய நாட்களில் பெங்களூரு-சேலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, மேற்கண்ட நாட்களில் சேலம்-எர்ணாகுளம் இடையே மட்டுமே இயக்கப்படும்.கோவை-பெங்களூரு உதய் விரைவு ரயில் மே 31ம் தேதி, கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், பெங்களூரு-கோவை உதய் விரைவு ரயில் மே 31ம் தேதி, பெங்களூரு -கிருஷ்ணராஜபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. மேலும், கோவை-லோக்மான்யா திலக் விரைவு ரயில் மே 31ம் தேதி, வழக்கமான தருமபுரி, ஒசூர், பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம்-யெலஹங்கா ரயில் நிலையங்கள் இடையே திருப்பத்தூர், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெங்களூரு அருகே தண்டவாள பராமரிப்பு பணி கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bengaluru ,Salem Kottam ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்