×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் துவக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம் 1ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப திருவிழா நேற்று துவங்கியது. இரவு 9 மணியளவில் இசை நிகழ்ச்சிகளுடன் பார்வதி கல்யாணசுந்தரர் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழச்சி நடைபெற்றது. இதனையடுத்து தெப்பம் தென்கரை, மேல்கரை மற்றும் வடகரை வழியாக மீண்டும் கீழ்கரையை வந்தடைந்தது. தெப்பத்திருவிழாவையொட்டி குளத்தின் 4 புறங்கள் மற்றும் தெப்பம் மின்னொளியில் ஜொலித்தது. இதில் கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், துணை தலைவர் அகிலா சந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள் உட்பட திரளான பக்தரக்ள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 2வது நாளாக இன்றும், 3வது நாளாக நாளையும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் துவக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiagaraja ,Swarami Temple ,Thiruvarur ,Banguni Strict Festival ,Thiruvarur Thiagaraja Swami Temple ,Thiruvarur Thyagaraja Swarami ,Temple ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...