×

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன்

டெல்லி : டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் இருக்கும் அவருக்கு உடல்நிலை பாதித்து மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். டெல்லி உயர்நீதிமன்றம் இவருடைய ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், மருத்துவ நிலையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, நரசிம்மன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ நிலையை சுட்டிக் காட்டி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், ஜூலை 11 வரை 6 வாரங்களுக்கு சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரும்பும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் காலத்தில் சத்யேந்திர ஜெயினுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Delhi ,minister ,Satyendra Jain ,Supreme Court ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...