×

தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை திறந்த பயணி: கைது செய்த போலீஸ்

சியோல்: தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை பயணி திறந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்கொரியாவின் டேகு நகரில் ஆசியானா ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று ஜேஜு தீவிலிருந்து புறப்பட்டு டேகு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னரே பயணி ஒருவர் அதன் அவசர கதவைத் திறந்துவிட்டார்.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், ஒன்பது பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக டேகு தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவசரகால கதவை திறந்தவரை போலீஸ் கைது செய்தது.

The post தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை திறந்த பயணி: கைது செய்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : South Korea ,Seoul ,Asiana ,Airbus ,Daeku, South Korea ,Dinakaran ,
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை