×

டெலிகிராம், வாட்ஸ் ஆப் மூலம் வரும் லிங்க்குகளை கவனமாக அணுக வேண்டும்: தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை

சென்னை: டெலிகிராம், வாட்ஸ் ஆப் மூலம் வரும் லிங்க்குகளை கவனமாக அணுக வேண்டும். டெலிகிராம், வாட்ஸ் ஆப் மூலம் லிங்க்குகளை அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் என தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் லிங்க்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை. லேட்டஸ்டாக ஒரு மோசடி வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஏதாவது டெலிகிராம் குரூப்பில் சேர்ந்து முதலீடு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று மெசேஜ் வரும்.

நீங்களும் அப்படி என்ன இருக்கு என்று ஆசைப்பட்டு டெலிகிராமில் சேர்ந்துவிடுவீர்கள். டெலிகிராம் டாஸ்க் குரூப்பில் இணைத்து 20 டாஸ்க் கொடுத்து ஒவ்வொரு டாஸ்க்கிற்கும் முதலீடு செய்ய கூறுவர். முதலீடு செய்த தொகையை காயின் கலெக்டர் என்ற இணையதளத்தில் டிஸ்பிளே செய்வார்கள். டிஸ்பிளே செய்த பின் அனைத்து டாஸ்க்குகளையும் முடிக்கக் கூறி பணம் செலுத்தக் கூறி ஏமாற்றி விடுவார்கள். தினமும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post டெலிகிராம், வாட்ஸ் ஆப் மூலம் வரும் லிங்க்குகளை கவனமாக அணுக வேண்டும்: தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,WhatsApp ,Dinakaran ,
× RELATED சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம்...