×

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் தீபா மனுத்தாக்கல்..!!

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி தீபா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்துகளுக்கு உரிமை கோரி தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட கோரி ஆர்.டி.ஐ. அலுவலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சொத்துகளை ஏலம் விடுவதற்காக கடந்த மாதம் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். சொத்துகளை ஏலம்விடும் பணி வேகமெடுத்த நிலையில் மறுபுறம் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தீபா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெ. சொத்துகளுக்கு தீபா வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தீபா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜவளி, லஞ்ச ஒழிப்புத்துறை வாதிட்டது. வாதத்தை ஏற்ற நீதிபதி எச்.ஏ.மோகன் வழக்கு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் தீபா மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Deepa ,Bengaluru ,Jayalalithaa ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...