×

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடைபெறும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அரசு துறைகள் இணைந்து இந்த விழாக்களை நடத்தும். இந்த ஆண்டு 60வது மலர் கண்காட்சி விழா கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று கோலாகலமாக துவங்கியது. 3 நாள் கண்காட்சி நடக்கிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு ஒட்டக சிவிங்கி, முயல், வாத்து, மலர்தொட்டி, ஐஸ்கிரீம், டோனி டீசர்ட் உள்ளிட்ட உருவங்கள் பல வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள காட்டுமாடு, வரிக்குதிரை, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. ஏற்றுமதி ரகம் வாய்ந்த பல வண்ண மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 35 வகையான அல்லிசம், ஆந்தூரியம், ஆஸ்டர், பால்சம், கேலண்டுலா, காஸ்மோஸ், கோரியாப்சிஸ், கேண்டிடப்ட், செல்லோசியா, பால்போஸ், லிசானோ கிலாசம், டேலியா, ஹைலிகோனியா, ஜின்ஜர் லில்லி உள்ளிட்ட மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.முன்னதாக 60வது மலர் கண்காட்சியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

The post மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது appeared first on Dinakaran.

Tags : 60th flower exhibition ,Kodaikanal ,Kodakanal ,Princess ,Flower Exhibition ,of the ,Mountains ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...