சென்னை: மும்பை சி.எஸ்.டி. ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை ஒட்டி வாரம் ஒருமுறை ஜூன் 4 வரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். மும்பை சிஎஸ்டி-யிலிருந்து தூத்துக்குடிக்கு (01143) இன்றும், ஜூன் 2-ம் தேதியும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மும்பையிலிருந்து மதியம் 1.15-க்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து (01144) மே 28 மற்றும் ஜூன் 4-ம் தேதியும் மும்பை சிஎஸ்டி-க்கு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 3.40-க்கு மும்பை சிஎஸ்டி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மும்பை சி.எஸ்.டி. ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
