×

ராயக்கோட்டை அருகே தென்பெண்ணையில் ஆபத்தான குளியல்-தடுக்க வலியுறுத்தல்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான முறையில் குளிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராயக்கோட்டை அருகே பண்டப்பள்ளியில், தென்பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மத்தியில் தண்ணீர் ஓடும் பகுதியில் சிவன் கோயிலை கட்டியுள்ளனர். இந்த கோயிலுக்கு விடுமுறை நாட்களில் ஓசூர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலுக்கு ஓசூர்- தர்மபுரி மெயின்ரோட்டிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். இந்த கோயிலுக்கு வரும் போது, பாறையில் வழிந்ேதாடும் தண்ணீரில் சிறுவர், சிறுமிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர். பாறை வழுக்குவதால், நீரோட்டம் அதிகரிக்கும் போது ஆற்றில் அடித்து செல்லும் நிலை ஏற்படும். அதே போல, சிவன் கோயிலுக்கு செல்பவர்கள், தண்ணீரில் நடந்து செல்கின்றனர். எனவே, கோயிலுக்கு செல்ல சிறு பாலம் அமைக்க வேண்டும். மேலும், ஓடும் தண்ணீரில் குளிப்பதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராயக்கோட்டை அருகே தென்பெண்ணையில் ஆபத்தான குளியல்-தடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : South Penna Dam ,Rayakottai ,Tenpenna river ,
× RELATED புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றின்...