×

திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம்

சென்னை: திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவருக்கு பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதேபகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சுப்பிரமணியை பரிசோதித்துள்ளார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சுப்பிரமணியை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது நோயாளியுடன் சென்றிருந்த பாஜக நிர்வாகி புவனேஷ் என்பவர், பெண் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றும்படியும் அவர் தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பாஜக நிர்வாகியை கைது செய்யக்கோரி இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பாஜக பிரமுகர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதப்பிரச்சனையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவருக்கு பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற சமூகவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Tiruppoondii ,Tamil Nadu Medical Officers Association ,Chennai ,Tiruppoondi ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...