×

திருவள்ளூர் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிசையில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்த ஓலை கொட்டகையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்து குடுசை முழுவதும் நாசமானது. இதில் வடமாநிலத்தவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.தீயணைப்பு துறையினருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

The post திருவள்ளூர் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிசையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : North State ,Vijayanallur ,Tiruvallur ,Thiruvallur ,Cholavaram ,Tiruvallur district ,
× RELATED சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!!