×

மறுபடியும் முதல்ல இருந்தா!: சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்; அடுத்த மாதம் உச்சம் அடையும் என மருத்துவர்கள் கணிப்பு.. பீதியில் மக்கள்..!!

பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஜூன் மாத இறுதிக்குள் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2 ஆண்டுகள்கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே ஆட்டிப்படைத்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின. 70 லட்சம் உயிர் பலிகள், பொருளாதார இடர்பாடுகள், வேலை இழப்புகள் என மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது இந்த வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இருப்பினும் அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில் ஏப்ரலில் இருந்து ஓமைக்ரான் எக்ஸ் பிபி என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த அலை இந்த மாத இறுதிக்குள் ஒரு வாரத்தில் 4 கோடி பேரை தாக்கும் என்றும் அடுத்த மாத இறுதியில் உச்சம் தொட்டு ஒரே வாரத்தில் ஆறரை கோடி பேரை தாக்கும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த புதிய அலையை எதிர்கொள்வதற்கு புதிய தடுப்பூசியுடன் சீனா தயாராகி வருகிறது. இந்த தகவல் அங்குள்ள மக்களை கதிகலங்கச் செய்துள்ளது.

The post மறுபடியும் முதல்ல இருந்தா!: சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்; அடுத்த மாதம் உச்சம் அடையும் என மருத்துவர்கள் கணிப்பு.. பீதியில் மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...