×

ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதால் என்ன பயன்?: லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியீடு

சென்னை: ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து நகைகள் வாங்குவது அதிகரித்து இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதால் ஏற்படும் இடையூறு குறித்து நாடு முழுவதும் 341 மாவட்டங்களில் உள்ள சுமார் 57,000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் சுமார் 64% பேர் ரிசர்வ் வங்கி நடவடிக்கையை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 22% பேர் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். ரூ.2000 நோட்டுகளாக தங்கள் வீட்டில் தற்போது எவ்வளவு தொகை என்ற கேள்விக்கு 64% பேர் தங்களிடம் இல்லை என்றும் வெறும் 6% பேர் தங்களிடம் ரூ.1 லட்சம் இருப்பதாக தெரிவித்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்த முயன்ற 91% பேர் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் கூறியதாகவும், குறிப்பாக சில்லறை கடைகள் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சேவை துறைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளில் கூட ரூ.2,000 நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமத்தை அனுபவித்ததாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2000 நோட்டுகள் மாற்றுவதை தடை செய்ய வேண்டும் என்று 68% பேர் வலியுறுத்தியுள்ளனர். 29% பேர் இப்போது உள்ளதை போலவே பரிமாற்றம் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதால் என்ன பயன்?: லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Reserve Bank ,Local Circulls ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!