×

ஜப்பான் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பான்: ஜப்பான் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் AIRBAG INFLATOR தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துளர்கை ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோ அவர்களும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு கையொப்பமிட்டனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி, டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிஹிரோ அவோகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஜப்பான் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Japan Diesel Safety Systems Company ,Tamil Nadu Govt ,Japan ,Diesel Safety Systems ,Tamil Nadu ,Tirupporur… ,Tamil Nadu Government Company ,Dinakaran ,
× RELATED அரசு முத்திரை, சின்னங்கள் 1.04 லட்சம்...