×

விராலிமலை முருகன் மலை கோயிலில் வைகாசி விசாக திருவிழா

விராலிமலை, மே 26: விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன், 2ம் தேதி நடைபெறுகிறது. விராலிமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் 207 படிகள் கொண்ட இம்மலையின் மேல் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில்மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் நிகழாண்டு நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி மலைமேல் கோவிலில் நேற்று காலை 11 மணிக்கு முருகன், வள்ளி-தேவசேனா வுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சன்னிதானத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.

விழாவையொட்டி வரும் நாட்களில் தினமும் காலை, மாலை முருகன்- வள்ளி- தேவசேனா சமேதராக பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம், வெள்ளிக்குதிரை, வௌ்ளிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதை தொடர்ந்து 9 ம் நாளான ஜூன் 2ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் விழா நடைபெறுகிறது.

The post விராலிமலை முருகன் மலை கோயிலில் வைகாசி விசாக திருவிழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakha Festival ,Viralimalai ,Murugan Hill Temple ,Viralimalai Murugan Hill Temple ,Chariotam… ,Dinakaran ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா