×

வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை துவக்கம்

திருப்பூர், மே 26: திருப்பூர் மாநகரில் விஸ்வேஸ்வரசாமி, வீரராகவ பெருமாள் கோவில்களின் வைகாசி விசாக தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக, கோவிலில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 2 தேர்களிலும் சாரம் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை மகுடபூஜையுடன் தேரை அலங்கரிக்கும் பணியும், செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடந்தது. இந்தாண்டு தேர்களுக்கு புதிய வடக்கயிறுகளும், துணிகளும் அமைக்கப்படுகிறது. நாளை (27ம் தேதி) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் மண்டப கட்டளை பூஜைகள் நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் இருவேளையும் (ரிஷபம், பூதம், ஆதிசேஷன், கற்ப விருட்சம், காமதேனு, அதிகாரநந்தி, குதிரை, சிம்மம், யானை, கைலாசம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்) திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தேர் திருவிழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தோ்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

The post வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Veeraragava Perumal temple chariot festival ,Tirupur ,Vaikasi Visakha Chariot Festival ,Visvesvaraswamy ,Veeraragava Perumal Temples ,Tirupur City ,Veeraragawa Perumal Temple Chariot Festival ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...