×

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை; எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் போது நிறுவப்படும் செங்கோல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிருபர்களுடம் பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 1947 நடந்த முக்கிய நிகழ்வு ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து ஆளுமை பரிமாற்றம் செய்த நிகழ்வு செங்கோல் பரிமாற்றம். ஆங்கிலேயர்களுக்கும், பிரதமருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான செங்கோல் பரிமாற்றம், இரவு 10.30 முதல் 12 மணிக்குள் நடந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்று செங்கோலை வழங்க உள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. .நாடாளுமன்றம் ஐனநாயகத்தின் கோயில், அந்த கோயிலுக்கான மரியாதையை அனைத்து கட்சிகளும் கொடுக்க வேண்டும், அதை புறக்கணிப்பது நல்லதல்ல. எதிர்கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும். செங்கோல் மத அடையாளம் இல்லை. அரசு அளுமை பரிவர்த்தனையை குறிக்கும் வகையிலேயே செங்கோல் பரிமாற்றம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் நமது கலாசாரம், பாரம்பரியத்தின் தொடர்பை பற்றி பேசுகிறது. எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது.

ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார் என்றார்.

The post நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை; எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister ,Nirmala Sitharaman ,Chennai ,Parliament ,Governor House ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...