×

நல்ல சாப்பாடு, பீடி, ஜாமீனில் செல்ல உதவி ஆசனவாயில் செல்போன் பதுக்கும் வாடகை கைதிகள்: சிறையில் நடக்கும் புது வியாபாரம்

சேலம்: ‘வாடகை தாய்’ சிஸ்டம் போல் சேலம் மத்திய சிறையில்சனவாயில் செல்போனை பதுக்கும் வாடகை கைதிகளை ரவுடிகள் உருவாக்கியுள்ளனர். இதற்காக நல்ல சாப்பாடு, பீடி போன்றவற்றை சம்பளமாக கொடுக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தீவிர கண்காணிப்பையும் மீறி ஒரு சில கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் குமரகுரு என்ற கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன் மீட்கப்பட்டது. இந்த செல்போன் சிறையில் உள்ள மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அந்த செல்போன் சிக்கியதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் உள்ள வசதி படைத்த கைதிகள், ஏழை கைதிகளை வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதாவது பணக்கார கைதிகள், ஏழை கைதிகளிடம் தங்கள் செல்போனை கொடுத்து ஆசனவாயில் பதுக்க வைத்து அவ்வப்போது வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக வாடகை கைதிகளுக்கு கேண்டீனில் நல்ல சாப்பாடு, பீடி, நொறுக்குத் தீனி மற்றும் ஜாமீனில் வெளியே செல்ல வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு வாடகை கைதிகள் செல்போனை ஆசனவாயில் மறைத்து வைத்து, அவர்கள் கேட்கும் போது எடுத்துக்கொடுத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. கைதிகள் அனைவரிடமும் சிக்குவது ஒரே வகையான சீன மாடல் செல்போன்களாக இருப்பதால் அதனை கைதிகளுக்கு விற்பனை செய்வது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கைதி குமரகுரு மற்றும் அவரிடம் செல்போன் கொடுத்து வைத்திருந்த மதுரை ரவுடி ஆகியோரிடம் சிறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

செல்போன் புதைத்து வைத்திருந்த கைதிகள்
கடலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி சிறையில் உள்ள கழிவறை அருகே சுமார் அரை அடி ஆழத்தில் குழி தோண்டி, பாலித்தீன் கவரில் ஒரு செல்போன் மற்றும் இரண்டு பேட்டரிகளை யாரோ புதைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

The post நல்ல சாப்பாடு, பீடி, ஜாமீனில் செல்ல உதவி ஆசனவாயில் செல்போன் பதுக்கும் வாடகை கைதிகள்: சிறையில் நடக்கும் புது வியாபாரம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Central ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில்...