×

மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு 1,250 லிட்டர் மெத்தனாலை ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை: சிபிசிஐடி விசாரணையில் திடுக் தகவல்

விழுப்புரம்: விஷச்சாராய கொலை வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட 11 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கடந்த 13ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாராய வியாபாரிககள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் அவர்களிடம் நேற்று 2வது நாளாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் மெத்தனால் எங்கிருந்து வந்தது, எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, என்று விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளையநம்பி என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானகரத்தில் செயல்பட்டு வந்து உள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஆலையை மூடிய நிலையில் அங்கிருந்துதான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஏழுமலைக்கு ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்து உள்ளார். இதனை வாங்கிய ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளார்’ என்று தெரிவித்து உள்ளனர்.

The post மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு 1,250 லிட்டர் மெத்தனாலை ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை: சிபிசிஐடி விசாரணையில் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,CBCID ,Villupuram ,
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்