×

போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக ஜான் பிரிட்டோ(59) பணியாற்றி வருகிறார். இளையான்குடி பகுதியில் பார்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி செல்வராஜ், போலீசாரை பணியிட மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் எஸ்எஸ்ஐ ஜான் பிரிட்டோவை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜான் பிரிட்டோ, மனமுடைந்து காணப்பட்டார்.நேற்று பணியில் இருந்த அவர், சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேஷன் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மற்ற போலீசார் கதவை வலுக்கட்டாயமாக தள்ளி திறந்து பார்த்தனர். அப்போது எஸ்எஸ்ஐ ஜான் பிரிட்டோ கழுத்தில் கயிற்றை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவரை கீழே இறக்கிய போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,John Britto ,Saaligramam Police Station ,Ilayayankudi, Sivagangai District ,Ilayayankudi… ,
× RELATED சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு