×

கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கான தகுதிச்சான்று இல்லாவிட்டால் அனுமதி ரத்து: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை: கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிய தகுதிச்சான்று பெறவில்லை என்றால், வாகனத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும், பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவுப் புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதியப்பட்டிருக்க வேண்டும்.

எனவே கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் “கழிவு நீர் அகற்றும் வாகனம்” என உரிய தகுதிச்சான்றுடன் 15 தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ள பிரிவு 86 மோட்டார் வாகன சட்டம், 1988ன்படி இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்து கொள்ள தவறினால், அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கான தகுதிச்சான்று இல்லாவிட்டால் அனுமதி ரத்து: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Transport Commission ,Chennai ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...