×

ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி தள்ளிப்போகுமா?

சென்னை: வருகிற ஜூன் 5ம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வருகிற ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை திறந்து வைத்திட வருமாறு கடந்த ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அவரும் பங்கேற்பதாக உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், ஜூன் 5ம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கலைஞர் நினைவு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5ம் தேதி குடியரசு தலைவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் திறப்பு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

The post ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி தள்ளிப்போகுமா? appeared first on Dinakaran.

Tags : President ,Tamil Nadu ,Artist Pannoku Hospital ,Chennai ,President of the Republic, ,Fluvupathi Murmu ,Artist Memorial Pannoku Hospital ,Dinakaran ,
× RELATED ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு