சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி,சேலம், திருச்சி, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர்,பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.
The post சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை.! அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
