×

புதிய கேடிஎம் 390 அட்வெஞ்சர்

கேடிஎம் நிறுவனத்தின், கேடிஎம் 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிள் முதன் முறையாக 3 ஆண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.3.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய பைக்கில், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் ஸ்போக் வீல் இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள டபிள்யூபி அபெக்ஸ் சஸ்பென்ஷன், தேவைக்கேற்ப முழுமையாக மாற்றியமைக்கூடிய வசதி உடையது.

பலதரப்பட்ட சாலைகளிலும் பயன்படுத்த ஏற்றதாக இது இருக்கும். ஸ்போக் வீல்களை பொறுத்தவரை, முன்புறம் 19 அங்குலம் கொண்ட சக்கரமும், பின்புறம் 17 அங்குலம் கொண்ட சக்கரமும் இடம் பெற்றிருக்கும். ரிம்களில் கருப்பு நிற பூச்சு இருக்கும். இதுதவிர இந்த பைக்கில் டிராக்‌ஷன் கன்ட்ரோல், 3டி ஐஎம்யு, குயிக் ஷிப்டர் பிளஸ், எல்இடி ஹெட்லாம்ப்கள் இடம்பெற்றிருக்கும்.

இதில் உள்ள 373 சிசி 4 ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 43.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக் கூடியது. வேரியண்ட்களுக்கு ஏற்ப, முழுவதும் மாற்றி அமைக்கக்கூடிய சஸ்பென்ஷன் கொண்ட 390 அட்வெஞ்சர் விலை சுமார் ரூ.3.6 லட்சம், டிராக்‌ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் கொண்ட வேரியண்ட் சுமார் ரூ.3.39 லட்சம், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 390 அட்வென்சர் எக்ஸ் சுமார் ₹2.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post புதிய கேடிஎம் 390 அட்வெஞ்சர் appeared first on Dinakaran.

Tags : KTM ,KTM Company ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...