சென்னை: சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சேவைகள்
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 25,23,373 0-6 வயது குழந்தைகள், 6,82,073 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 46,063 வளரிளம் பெண்கள் ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் இத்திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ.2765 கோடி செலவினம் மேற்கொள்ளப்படுள்ளது. பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம்பெண்களுக்கு ஊட்டச்சத்துவழங்குதல், ஆரம்பகாலகுழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி ஆகிய சேவைகளை வழங்கிவருகிறது. சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி போடுதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருந்துவ பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை,பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை தகுதியுடைய அனைவரும் தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்து பயன் பெறலாம்,
சத்துமாவு வழங்கப்படும் அளவு:
குழந்தைகளுக்கான சேவைகள்:
* 6 மாதம்முதல் 1 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 125 கிராம் வீதம் சத்துமாவு 15 நாட்களுக்கு ஒரு முறை அரை கிலோ பாக்கெட்டுக்களாக வழங்கப்படுகிறது. அதனுடன் அரை கிலோ கொள்ளளவு கொண்ட காற்று புகாபிளாஸ்டிக்டப்பா வழங்கப்படுகிறது.
* 1 முதல் 2 வயதுகுழந்தைகளுக்கு,நாளொன்றுக்கு 125 கிராம்சத்துமாவு வீதம் 15 நாட்களுக்கு ஒருமுறை 500 கிராம் பாக்கெட்டுகளில் சத்துமாவு வழங்கப்படுகிறது. வாரத்திற்கு மூன்று முட்டைகள்,வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் வழங்கப்படுகின்றது.
* 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக நாளொன்றுக்கு 60 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
* குழந்தைகள் மையத்திற்கு வருகை தரும் 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு ,நாளொன்றுக்கு ஏலக்காய் (அ) வெண்ணிலா (அ) ஸ்ட்ராபெர்ரி (அ) சாக்லேட் மணமூட்டப்பட்ட50 கிராம் சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி மற்றும் சத்துமாவு உருண்டையாக காலையிலும், மாலையிலும் வழங்கப்படுகிறது.
* மேலும், வாரத்தில் 6 நாட்களுக்கு சூடான சமைத்த சத்தான உணவுகள் மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தக்காளி சாதம் + வேகவைத்த முட்டை, செவ்வாய்க்கிழமையில் கலவை சாதம் + வேகவைத்த கருப்புக் கொண்டைக்கடலை (அல்லது) வேகவைத்த பச்சைப் பயறு, புதன்கிழமையில் காய்கறிப்புலவு + வேகவைத்த முட்டையும், வியாழக்கிழமையில் எலுமிச்சை சாதம் + வேகவைத்த முட்டையும், வெள்ளிக்கிழமையில் பருப்பு சாதம் + வேகவைத்த உருளைக்கிழங்கும் வழங்கப்படுகிறது.
* சனிக்கிழமையில் கலவை சாதம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில்அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது.
* மேலே கூறப்பட்ட வை தவிர, 2 முதல் 6வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 30 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது.
* வருடத்திற்கு இருமுறை குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
* குழந்தை மைய பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் மாதந்தோறும் எடுக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி போஷன் ட்ராக்கர் செயலியின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
* இரும்புச் சத்து திரவம் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைக்களுக்கு வாரத்திற்கு இரு முறை 1 மில்லி வழங்கப்படுகிறது. மேலும் குடற்பூச்சி நீக்க மருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
* 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைக்கு ஆண்டிற்கு 2 முறை வைட்டமின் ‘ஏ’ திரவம்வழங்கப்படுகிறது.
ஆரம்பகாலகுழந்தைபராமரிப்புக்கல்வி:
* 2முதல்6வயது வரையிலான மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்கு ,ஆடிப்பாடி விளையாடுப் பாப்பா பாடத்திட்டதின்படி விளையாட்டு மூலம் ,மாதம் ஒரு தலைப்பின் மூலம், உடல், மனம், அறிவு, மொழி, சமூகவளர்ச்சியை உருவாக்கும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
* முன் பருவகல்விக்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு இரண்டு இணை ஆயத்த வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சேவைகள்
* குழந்தை மையத்தில் பதிவு செய்த கர்ப்பிணிபெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் சத்துமாவு 15 நாட்களுக்கு ஒரு முறை 500கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படுகிறது.அதனுடன் அரைகிலோ கொள்ளளவு கொண்ட காற்று புகாபிளாஸ்டிக்டப்பாவழங்கப்படுகிறது.
* கர்ப்பிணிபெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் குடற்புழுநீக்கமாத்திரைகள் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
* பச்சிளம்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் பற்றி கற்றுதரப்படுகிறது.
சத்துணவுமற்றும்சுகாதாரகல்வி:
* சத்துணவு சுகாதார கல்வியான குழந்தைகள் மையத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
* குழந்தைக்கு உணவூட்டுதல், கணவன் மார்களுக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இருமுறை மையத்தில் நடத்தப்படுகின்றது.
* தமிழ்நாடு ஊட்டச்சத்து குறைபாடி லில்லாத நிலையை அடைந்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பிறப்பு முதல் 6 வயது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில், “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை அடைய, 07.05.2022 அன்று“ ஊட்டச்சத்தைஉறுதிசெய்”என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். 37.27 இலட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிப்பட்டனர். ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனைச் செய்யப்பட்டது இதில் 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது.
பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துமாவு, பேரிச்சம்பழம், ஆவின்நெய், புரோட்டின்பிஸ்கட், இரும்புசத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் முறையே 2 மற்றும் 1 தாய்ப்பாலின் தரம் மற்றும் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த வழங்கப்பட்டுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம்முதல் 6 வயதுவரையிலான 93,200 குழந்தைகளுக்கு, சிறப்பு உணவு (RUTF) வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்பயன்களை மக்கள் நன்கு தெரிந்துக் கொண்டுஅருகில் உள்ள குழந்தை மையங்கள் மூலமாக அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.“தாய் சேய் நலமே ஒருநாட்டின் வளமான எதிர்காலம்”
The post ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம்..! appeared first on Dinakaran.